பள்ளிக்கரணையில் மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பலி

பள்ளிக்கரணையில் மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.
பள்ளிக்கரணையில் மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பலி
Published on

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் சங்கராபுரம் 7-வது தெரு, விஜய் அவென்யூவை சேர்ந்தவர் ஜெய்சுந்தர் (வயது 48). இவர், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது ராமாபுரத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவர், அலுவலகத்துக்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கரணை-வேளச்சேரி மெயின் சாலை வழியாக வேளச்சேரி நோக்கி சென்று கொண்டு இருந்தார். பள்ளிக்கரணை சிவன் கோவில் அருகே செல்லும்போது சாலையின் நடுவே சென்ற பசுமாடு மீது எதிர்பாராதவிதமாக மோதி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த மாநகர பஸ் அவரது தலை மீது ஏறி இறங்கியது. இதில் ஜெய்சுந்தர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மேக்சி டிசோசா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான சேலையூர் ராஜாஜி நகர் 3-வது தெருவை சேர்ந்த தனசேகர் (50) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com