குற்றாலம் அருவியில் திடீரென விழுந்த உடும்பு.! - பெண்கள் அலறியடித்து ஓட்டம்

தீயணைப்பு வீரர்கள் உடும்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் போட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.
குற்றாலம் அருவியில் திடீரென விழுந்த உடும்பு.! - பெண்கள் அலறியடித்து ஓட்டம்
Published on: 

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் தற்பொழுது தண்ணீர் சீராக விழுகிறது.

உடும்பு

மெயின் அருவியில் சீராக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலை கோவிலுக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் உற்சாகமாக குளிக்கின்றனர். நேற்று குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் திடீரென உடும்பு ஒன்று தண்ணீரில் அடித்து வரப்பட்டு கீழே விழுந்தது.

பெண்கள் ஓட்டம்

இதனைப் பார்த்த பெண்கள் அலறியடித்து ஓடினர். அருவியில் விழுந்த உடும்பு, அருகில் உள்ள தடாகத்தில் தண்ணீரில் நீந்தியவாறு கிடந்தது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் இணைந்து தடாகத்தில் கிடந்த உடும்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் போட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

X