வெவ்வேறு சம்பவங்களில் மது பழக்கத்துக்கு அடிமையான ஐ.டி.நிறுவன ஊழியர், ஐஸ் வியாபாரி தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் மது பழக்கத்துக்கு அடிமையான ஐ.டி.நிறுவன ஊழியர், ஐஸ் வியாபாரி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.
வெவ்வேறு சம்பவங்களில் மது பழக்கத்துக்கு அடிமையான ஐ.டி.நிறுவன ஊழியர், ஐஸ் வியாபாரி தற்கொலை
Published on

வெவ்வேறு சம்பவங்களில் மது பழக்கத்துக்கு அடிமையான ஐ.டி.நிறுவன ஊழியர், ஐஸ் வியாபாரி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஐஸ் வியாபாரி

உப்பிலியபுரத்தை அடுத்த வைரிசெட்டிப்பாளையம் மேற்கு குறும்பர் தெருவை சேர்ந்தவர் பரிமனம் (வயது 52). ஐஸ் வியாபாரியான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி ராஜலட்சுமியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடந்த பரிமனம் சம்பவத்தன்று பரிமனம் வீட்டில் எலிபேஸ்ட் தின்று மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஐ.டி.நிறுவன ஊழியர்

திருவானைக்காவல் ஸ்ரீனிவாசநகரை சேர்ந்தவர் வசந்தன்பிரேம் (36). ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சவுந்தர்யா (27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. வசந்தன்பிரேம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் மதுபோதைக்கு அடிமையான அவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் வைத்து மது குடித்துள்ளார். இதை சவுந்தர்யா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வசந்தன்பிரேம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com