விருத்தாசலம் அருகே ரெயில் மோதி முதியவர் பலி

விருத்தாசலம் அருகே ரெயில் மோதி முதியவர் உயிழந்தா.
விருத்தாசலம் அருகே ரெயில் மோதி முதியவர் பலி
Published on

விருத்தாசலம்,

விருத்தாசலம் மணலூர் ரெயில்வே மேம்பாலம் அருகே திருச்சி ரெயில் பாதையில் நேற்று முன்தினம் இரவு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, இறந்து கிடந்த முதியவரின் உடலை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அந்த வழியாக சென்ற ரெயில் மோதி பலியானது தெரியவந்தது. ஆனால் அந்த முதியவர் யார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் மோதி பலியான முதியவர் யார்?, அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com