அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த முதியவர் சாவு

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த முதியவர் இறந்தார்.
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த முதியவர் சாவு
Published on

நன்னிலம்:-

பேரளம் அருகே உள்ள கூத்தனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது63). விவசாய தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெரு விளக்கு மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதை எதிர்பாராதவிதமாக அவர் தனது காலால் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com