நெல்லை: பஸ் நிறுத்தத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி

நெல்லை அருகே நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து பலியானார்.
நெல்லை: பஸ் நிறுத்தத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி
Published on

நெல்லை,

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி அடுத்த கீழக்கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சூரியநாராயணன் (வயது 65). இவர் இன்று காலை பஸ்சுக்காக கொண்டாநகரம் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். நீண்ட நேரம் காத்துநின்ற அவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com