சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி செய்தா
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி
Published on

சிவகங்கை

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஏராளமான விவசாயிகள் மனு கொடுக்க வந்திருந்தனர்.இந்த நிலையில் காளையார்கோவிலை அடுத்த நெடுவத்தாவு கிராமத்தை சேர்ந்த ராமன் (வயது 65) என்பவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

இதனை கண்ட அங்கிருந்த போலீசார் அவரை மீட்டதுடன் அவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ராமனுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபருக்கும் இட பிரச்சினை இருப்பதாகவும் இது குறித்து பிரச்சினைக்குரிய இடத்தை அளந்துகொடுக்க கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதும் தெரிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com