லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் உடல் நசுங்கி பலி

லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் உடல் நசுங்கி பலியானார்.
லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் உடல் நசுங்கி பலி
Published on

பெரம்பலூர் அருகே நெடுவாசல் மேற்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 70). இவர் நேற்று இரவு நெடுவாசல் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்தார். அப்போது கிரஷரில் இருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றி கொண்டு பெரம்பலூர் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் பெரம்பலூர் செல்வதற்காக அந்த டிப்பர் லாரியை கைகாட்டி நிறுத்தி ஏறியுள்ளார். மீண்டும் லாரி புறப்படும் போது பின் பக்கம் இடது சக்கரத்தில் கந்தசாமி சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com