தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரெயில் மோதி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரெயில் மோதி பலி
Published on

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த வழியாக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி அவர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இறந்த நபர் சிமெண்ட் மற்றும் வெள்ளை நிற கோடு போட்ட சட்டையும், நீலம் மற்றும் பச்சை கலந்த கோடு போட்ட லுங்கியும் அணிந்து இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரெயில்வே இருப்பு பாதையை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com