மழையில் சென்ற முதியவர்.. தகரத்தில் உரசிய மின்கம்பி.. அடுத்து நடந்த அதிர்ச்சி

இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் தளவாய்அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னவன் (வயது 65). இவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். மழை பெய்து இருந்ததால் மின்சார ஒயர் அந்தப் பகுதியில் இருந்த தகரத்தின் மீது உரசியபடி இருந்தது.

உயிரிழப்பு

அது சின்னவன் மீது பட்டதால் அவரை மின்சாரம் தாக்கியது, இதில் தூக்கி வீசப்பட்ட சின்னவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com