ஆட்டுக்குட்டியை மீட்பதற்காக இறங்கிய முதியவர் நீரில் மூழ்கி சாவு

கந்திலி அருகே கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்பதற்காக இறங்கிய முதியவர் நீரில் மூழ்கி சாவு
ஆட்டுக்குட்டியை மீட்பதற்காக இறங்கிய முதியவர் நீரில் மூழ்கி சாவு
Published on

கந்திலி ஒன்றியம் நரியனேரி ஊராட்சி வீரமுஷ்டப்பள்ளி கிராமத்தைச் சர்ந்தவர் நடராஜன் (வயது 65).

விவசாயியான இவர் ஆடு வளர்த்து வந்தார். மேய்ச்சலுக்கு விடப்பட்ட இவரது ஆட்டுக்குட்டி சகாதேவன் என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்துவிட்டது.

அதனை மீட்பதற்காக கிணற்றில் நடராஜன் கிணற்றில் இறங்கினார்.

அப்போது அவர் நீரில் மூழ்கி இறந்து விட்டார்.

இது குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com