4 மாத பெண் குழந்தையை சுடுகாட்டில் வீசிச்சென்ற கல்நெஞ்சு தாய் போலீசார் விசாரணை

எடப்பாடி அருகே 4 மாத பெண் குழந்தையை சுடுகாட்டில் வீசிச்சென்ற கல்நெஞ்சு தாயை போலீசார் தேடிவருகிறார்கள்.
4 மாத பெண் குழந்தையை சுடுகாட்டில் வீசிச்சென்ற கல்நெஞ்சு தாய் போலீசார் விசாரணை
Published on

சேலம் ,

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் ஊராட்சி சிலுவம்பாளையம் சுடுகாட்டு பகுதியில் உள்ள முட்புதரில் நேற்று காலையில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் முட்புதர் பகுதிக்கு சென்று பார்த்த போது, அங்கு பிறந்து 4 மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று அழுதபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து பூலாம்பட்டி போலீசார் அங்கு சென்று அந்த பெண் குழந்தையை மீட்டனர். பின்னர் சித்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்த குழந்தையை ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக அந்த குழந்தையை அதன் தாயே சுடுகாட்டில் வீசிச்சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். கல்நெஞ்சு தாயை போலீசார் தேடிவருகிறார்கள்

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com