சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

பாளையங்கோட்டையில் மண்எண்ணெய் அடுப்பில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு
Published on

சமாதானபுரம்:

பாளையங்கோட்டை சமாதானபுரம் சத்யா நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மனைவி பகவதி (வயது 78). இவர் நேற்று காலையில் வீட்டில் மண்எண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்ததால், பகவதி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com