முதியவரை கொன்று மூதாட்டி பாலியல் வன்கொடுமை - கிருஷ்ணகிரியில் பயங்கரம்

சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவரை கொன்று மூதாட்டி பாலியல் வன்கொடுமை - கிருஷ்ணகிரியில் பயங்கரம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே முதியவரை கொன்று அவரது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி வசித்து வந்தனர். இந்த நிலையில், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், 70 வயது முதியவரை கொடூமாக தாக்கினார். இதனை தடுக்க முயன்ற 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவம் நடந்த இடத்தை சுற்றி ஆய்வு செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com