செய்யாறு அருகே ஆம்னி வேன் கேஸ் கசிந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

செய்யாறு அருகே ஆம்னி வேன் கேஸ் கசிந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்யாறு அருகே ஆம்னி வேன் கேஸ் கசிந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே உள்ள செய்யாற்றை வென்றான் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 52) இவரது மனைவி ஆரவல்லி.

இவர்கள் குடும்பத்துடன் சென்னை தண்டாரப்பேட்டையில் வசித்து வருகின்றனர். நேற்று சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு வருவதற்காக தனது மனைவியுடன் ஆம்னி வேனில் நேற்று இரவு 9 மணி அளவில் செய்யாறு பஸ் நிலையம் எதிரில் ஆற்காடு சாலையில் வந்து கொண்டிருந்த போது காரில் இருந்து காஸ் கசிந்து வாசனையுடன் சத்தம் வரவே உடனடியாக காரில் இருந்த ஞானசேகரன் மனைவியுடன் இறங்கிவிட்டார்.

சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பத்துடன் சாலை ஓரத்தில் இருந்து பக்கோடா கடை, பூக்கடை வைத்திருப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கார் குபு குபு என எரிந்து கொண்டு இருந்தது தகவல் அறிந்து தீயணைப்பு அலுவலர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் கார் முழுதும் இருந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. தீ விபத்து ஏற்பட்டது பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் நிலையம் என்பதால் பரபரப்பாக காணப்பட்டது. செய்யாறு போலீசார் தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை செய்து போக்குவரத்தை சரி செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com