துணை மருத்துவ படிப்புக்கான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு இன்று முதல் நடக்கிறது

துணை மருத்துவ படிப்புக்கான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு இன்று முதல் நடக்கிறது.
துணை மருத்துவ படிப்புக்கான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு இன்று முதல் நடக்கிறது
Published on

சென்னை,

பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம்., ஆய்வக தொழில்நுட்பம் உள்பட 17 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு தாமதமாகிவந்த நிலையில், கடந்த 4-ந் தேதி கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. கலந்தாய்வு இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, துணை மருத்துவப் படிப்புக்கான சிறப்புப் பிரிவு மாணவர்களுக்குரிய கலந்தாய்வு நேற்று நடந்தது. மொத்தம் 53 மாணவ-மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தநிலையில், 27 பேர் கலந்தாய்வில் பங்குபெற்றனர். அவர்களில் 23 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள துணை மருத்துவ படிப்புகளை தேர்வு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. 4 சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்தக் கலந்தாய்வின் முதல் சுற்று இன்று தொடங்கி 15-ந் தேதி வரையிலும் (தரவரிசை 1 முதல் 7 ஆயிரத்து 59 வரை), 2-ம் சுற்று கலந்தாய்வு 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரையிலும் (தரவரிசை 7 ஆயிரத்து 60 முதல் 17 ஆயிரத்து 78 வரை), 3-ம் சுற்று கலந்தாய்வு 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலும் (தரவரிசை 17 ஆயிரத்து 79 முதல் 27 ஆயிரத்து 332 வரை), 4-ம் சுற்று கலந்தாய்வு 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையிலும் (தரவரிசை 27 ஆயிரத்து 333 முதல் 37 ஆயிரத்து 334 வரை) நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com