திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்

கொளப்பள்ளியில் திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய் மீது மேல் மூடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்
Published on

பந்தலூர்

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகர், அண்ணா நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கொளப்பள்ளி-அய்யன்கொல்லி சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இதற்கிடையே கால்வாய் மற்றும் சிறு பாலங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நின்றது. பின்னர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, கால்வாய், சிறுபாலங்கள் சீரமைக்கப்பட்டது. ஆனால், மேல்மூடிகள் அமைக்கப்பட வில்லை. ஒரு பகுதியில் முறையாக சீரமைக்கப்படாததால், குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. கழிவுநீர் கால்வாயை யொட்டி நடைபாதையில் பொதுமக்கள், சிறுவர்கள் நடந்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும் போது கால்வாய்க்குள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, கழிவுநீர் கால்வாயில் மேல்மூடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com