மன்னார்குடியில் திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாய் மூடப்பட்டது

மன்னார்குடியில் திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாய் மூடப்பட்டது
மன்னார்குடியில் திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாய் மூடப்பட்டது
Published on

தினத்தந்தி செய்தி எதிரொலியாக மன்னார்குடியில் திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாய் மூடப்பட்டது.

திறந்துகிடந்த கழிவுநீர் கால்வாய்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபாலசமுத்திரம் தெற்கு வீதியில் கழிவுநீர் கால்வாய் சரிவர மூடப்படாமல் திறந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கினர். இரவு நேரங்களில் கால்வாயில் விழுந்து காயமடைந்தனர். உடனடியாக இந்த கழிவு நீர் கால்வாயை மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

மூடப்பட்டது

இதுகுறித்து செய்தி படத்துடன் 'தினத்தந்தி'யில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாய் தற்போது கான்கிரீட் போடப்பட்டு மூடப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும் அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com