அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க உத்தரவு

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
2025-26-ம் கல்வியாண்டுக்கான 3-ம் பருவத்துக்கு பாடப் புத்தகம், நோட்டுகள் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்குவது, பாதுகாப்பாக வைப்பது தொடர்பாக கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பாடப்புத்தகங்கள், நோட்டுகள் பெறப்பட்டுள்ளதா? என்பதை உறுதிசெய்ய வேண்டும். அதனை வினியோக மையங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களிடம் அதனை வழங்கும்போது, அந்த விவரத்தினை வழங்கல் பதிவேட்டில் பதிவுசெய்யவேண்டும். வினியோக மையங்களில் இருந்து வழங்கும்போது, ஆசிரியர்கள், மாணவர்களை இந்த பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் விவரத்தினை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






