சென்னையில் விசாரணை கைதி தற்கொலை - 3வது மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு...!

சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த கைதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
சென்னையில் விசாரணை கைதி தற்கொலை - 3வது மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு...!
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தெலுங்கானாவை சேர்ந்த ராயப்ப ராஜு என்பவர் 48 கிலோ மெத்தபெட்டமைன் என்ற தடைசெய்யப்பட்ட போதை பொருளுடன் சிக்கியது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, விசாரணை கைதி ராயப்ப ராஜு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தின் 3-வது மாடியில் இருந்த குதித்துள்ளார். இதில் படுகாயாம் அடைந்த அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே இவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தற்போது, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com