

சென்னை
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் தொடர் பாக விவாதிப்பதற்காக, தமிழக அமைச்சர்கள் குழு, நாளை கேரளா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பாசன வசதிக்காக, ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் ஆகியோர் அடங்கிய குழு, நாளை கேரளா செல்கிறது. அவர்கள் கேரள முதல் மந்திரி விடி சதீசன் மற்றும் நீர்ப்பா சனத்துறை மந்திரியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.