ஆனைமலையாறு - நல்லாறு பாசன திட்டம்: தமிழக அமைச்சர்கள் குழுவின் கேரள பயணம் ஒத்திவைப்பு

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
ஆனைமலையாறு - நல்லாறு பாசன  திட்டம்:   தமிழக அமைச்சர்கள் குழுவின் கேரள பயணம் ஒத்திவைப்பு
Published on: 

சென்னை,

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் தொடர்பாக விவாதிப்பதற்காக கேரளா செல்ல இருந்த தமிழக அமைச்சர்கள் குழுவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆனைமலையாறு - நல்லாறு பாசன திட்டம்

கேரளாவில் உற்பத்தியாகி வீணாக அரபிக்கடலுக்கு செல்லும் ஆனைமலையாறு நீரை, நல்லாறு வழியாக திருப்பி தமிழ்நாட்டில் உள்ள திருமூர்த்தி அணைக்குக்கொண்டு வருவதே ஆனைமலையாறு - நல்லாறு திட்டமாகும்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பாசன வசதிக்காக ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கேரள அரசுடன் விவாதிப்பதற்காக தமிழக அமைச்சர்கள் குழு இன்று கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தது.

இந்த குழுவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கேரள முதல் மந்திரி விடி சதீசன் மற்றும் அம்மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரியை சந்திக்க இருந்தனர்.

தமிழக அமைச்சர்கள் குழு பயணம் ரத்து

இந்நிலையில், ஆனைமலையாறு - நல்லாறு பாசன திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அமைச்சர்கள் குழுவின் மேற்கொள்ள இருந்த கேரள பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அமைச்சர்கள் குழுவினர் கேரள பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com