தனியார் பள்ளி கூட்டமைப்பு நிர்வாகிக்கு அன்பில் மகேஷ் நோட்டீஸ்

48 மணிநேரத்திற்குள் நந்தகுமார் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
அன்பில் மகேஷ்
Published on

சென்னை,

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கப்பட்டதாக குற்றம் சாட்டிய தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளர் நந்தகுமாருக்கு எதிராக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வழக்கறிஞர் வில்சன் வாயிலாக அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீஸில், 48 மணிநேரத்திற்குள் நந்தகுமார் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் எனவும், அவதூறுக்காக ரூ.50 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் எனவும், இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

முந்தைய தி.மு.க ஆட்சியில் பள்ளி அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழ் பெறவும் பெருமளவில் லஞ்சம் பெறப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது. இது தொடர்பாகப் பதிவு செய்யப்படாத சங்கம் ஒன்றின் தலைவரான அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். இந்த லஞ்சப் புகார்களில் தன்னுடைய பெயரும் தொடர்புபடுத்திப் பேசப்பட்டதை அடுத்து, தன் மீதான அவதூறுகளுக்கு எதிராக அன்பில் மகேஷ் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com