ராமதாஸ் தலைமையில் நடந்த பொங்கல் விழாவை புறக்கணித்த அன்புமணி

அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை,
தமிழகத்தின் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அதன்படி, பொங்கல் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபும் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இதில் ராமதாஸ் குடும்பத்தினர் மற்றும் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால் பொங்கல் விழாவில் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்கவில்லை. உட்கட்சி பூசலால் விழாவை புறக்கணித்துள்ளனர். அன்புமணி இல்லாமல் தைலாபுரத்தில் நடைபெறும் முதல் பொங்கல் விழா இதுவாகும்.
Related Tags :
Next Story






