அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை: ராமதாஸ் திட்டவட்டம்


அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை: ராமதாஸ் திட்டவட்டம்
x
தினத்தந்தி 3 July 2025 11:14 AM IST (Updated: 3 July 2025 11:32 AM IST)
t-max-icont-min-icon

பாமகவில் இருந்து எம்.எல்.ஏ. அருள் நீக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவித்தார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ. அருள் செயல்பட்டு வருகிறார். இதன்காரணமாக அவரை கட்சியின் இணை பொதுச்செயலாளராக ராமதாஸ் நியமித்தார்.

இதனையடுத்து தொடர்ந்து அன்புமணிக்கு ராமதாசுக்கு எதிராக செயல்பட்டு வரும் அருளை கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவித்தார். இது பாமக நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ.வை நீக்க அன்புமணி ராமதாசுக்கு அதிகாரம் இல்லை. ஜி.கே.மணி மூலம் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துதான் அருளை நீக்க முடியும். பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. பாமக கொறடாவாக அருள் தொடர்வார். அருளுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர், இணை பொதுச்செயலாளர் பதவிகளை வழங்க உள்ளேன்.

திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி பேசி வருவதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் வதந்திதான். செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழுவை கூட்டி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். என் மனம் வேதனைப்படும் அளவு நடக்கின்றனர், எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கட்சியை நடத்தி வருகிறேன். கட்சியை தொடந்து நானே வழிநடத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story