திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார்

திண்டிவனம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார்.
திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார்
Published on

விழுப்புரம்,

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தற்போது விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் அதிகாலையிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தினர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார். முன்னதாக திண்டிவனம், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகாதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com