அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செய்த அன்புமணி ராமதாசின் மகள்கள்


அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செய்த அன்புமணி ராமதாசின் மகள்கள்
x

அன்புமணி ராமதாசின் மகள்கள், கோவில் முன்பு உள்ள அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம்


பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா, தன்னுடைய மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுமித்ரா ஆகியோருடன் ராமேசுவரத்துக்கு நேற்று வந்தார்.

ராமநாதசுவாமி கோவிலின் உப கோவிலான நம்புநாயகி அம்மன் கோவில் தனுஷ்கோடி சாலையில் உள்ளது. அங்கு சவுமியா அன்புமணி, தனது மகள்களுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், சங்கமித்ரா, சஞ்சுமித்ரா ஆகியோர் கோவில் முன்பு உள்ள அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அரைக்கப்பட்ட மஞ்சள் மற்றும் பூ மாலை, மாம்பழங்களை நம்புநாயகி அம்மனுக்கு படைத்து சவுமியா அன்புமணி, மகள்களுடன் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story