நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

அஜித், கலை மற்றும் விளையாட்டுத்துறைகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, ஜனாதிபதியிடமிருந்து பெற்ற நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கலை மற்றும் விளையாட்டுத்துறைகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்.

விளையாட்டுத் துறையில் படைத்த சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருதை, ஜனாதிபதியிடமிருந்து பெற்ற கிரிக்கெட் வீரர் அஷ்வின் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விளையாட்டுத்துறையில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com