தொகுதி பங்கீடு: அமித்ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் அன்புமணி ராமதாஸ்

கூட்டணியில் தங்களுக்கான தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷா உடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
தொகுதி பங்கீடு: அமித்ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் அன்புமணி ராமதாஸ்
Published on

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் 23ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை அதிமுக, பாஜக, அமமுக, பாமக கட்சிகள் ஒன்றுசேர்ந்து சந்திக்கிறது. தற்போது தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று டெல்லி சென்றார். அங்கு அமித்ஷாவை சந்தித்த அவர், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று டெல்லிக்கு பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். டிடிவி தினகரனும் காலை 11 மணிக்கு டெல்லி செல்ல உள்ளார். கூட்டணியில் தங்களுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து அமித்ஷா உடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com