தமிழகத்தில் தொழிற்சாலைகளில் 80 சதவீதம் தமிழருக்கு வேலை வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

திருத்தணியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 80 சதவீதம் தமிழர்களுக்கு வேலை வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும் என பா.மா.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் தொழிற்சாலைகளில் 80 சதவீதம் தமிழருக்கு வேலை வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Published on

பொதுக்கூட்டம்

பா.ம.க 2.0 விளக்க பொதுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு 142 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது பல்வேறு விளக்கங்களைக் கேட்டு இந்த மசோதா திருப்பி அனுப்பபட்டது. இந்த 142 நாட்கள் இடைவெளியில் 18 பேர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு தமிழக ஆளுநர் தான் காரணம். தமிழக அரசு மீண்டும் திருத்தங்கள் கொண்டு வந்து சட்ட மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தடை சட்டம் கொண்டுவரப்படவில்லை என்றால் பா.ம.க மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.

தமிழருக்கு வேலை வழங்க சட்டம்

வடமாநில தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வடமாநிலத்தவர் தமிழகத்தை நோக்கி வருவதை தடுக்க தமிழகத்திலுள்ள தொழிற்சாலைகளில் 80 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்க கூடிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். இது போன்ற சட்டம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. தமிழ் நாட்டில் 27 மணல் குவாரிகள், 45 மாட்டுவண்டி மணல் குவாரிகள் இவை அனைத்தையும் தமிழக அரசு மூட வேண்டும். சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்க வேண்டும்.

அனைவருக்கும் இலவச பஸ்கள் அறிமுகப்படுத்த வேண்டும்

வெள்ள பாதிப்புகளை தடுக்க தடுப்பணைகளை கட்டுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். சென்னையில் 1,000 பஸ்கள் தனியார் மையமாவதற்கு ஒரு திட்டம் தீட்டி உள்ளனர். இந்த திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டு, 2021 நவம்பர் மாதம் கையெழுத்திடப்பட்டுள்ளது. உலக வங்கியில் ரூ.2,500 கோடி நிதி வாங்குவதற்கு முதல் நிபந்தனையாக சென்னையில் முதலில் 1,000 பஸ்கள் தனியார் மயமாக்க வேண்டும் என்பது தான். போக்குவரத்து அரசின் கடமை அரசு பஸ்கள் தனியார் மையமாவதை பா.ம.க எதிர்க்கிறது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து அரசுடமையாக்கப்பட்டது. ஆனால் தற்போது தனியார் மயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மகளிர்க்கு மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் இலவச பஸ்கள் அறிமுகப்படுத்த வேண்டும். இதனால் இருசக்கர வாகன விபத்துக்கள் வெகுவாக குறையும், இறப்புகள் வீதம் குறையும், சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும், ஒரு குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் மாதத்திற்கு மிச்சமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com