அமைதி, வளம், ஒற்றுமை நிறையட்டும் ; அன்புமணி ராமதாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து


அமைதி, வளம், ஒற்றுமை நிறையட்டும் ; அன்புமணி ராமதாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து
x
தினத்தந்தி 24 Dec 2025 11:35 AM IST (Updated: 24 Dec 2025 12:13 PM IST)
t-max-icont-min-icon

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடப்பட உள்ளது.

சென்னை

கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

மன்னிப்பது மட்டுமே மகத்தான மனிதகுணம் என்பதை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசுபிரான் அன்பு காட்டினார். உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். தமது வாழ்நாளின் கடைசி நொடி வரை அன்பையும், கருணையையும் காட்டியது மட்டுமின்றி, எதிரிகளுக்கு மன்னிப்பையும் வழங்கினார்.

இன்றைய உலகிற்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல. மாறாக அவற்றை விட மிகவும் சக்தி வாய்ந்த அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை ஆகியவை தான். இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் ஆகும்.

இயேசு பிரான் போதித்ததைப் போலவே உலகில் அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்; கருணை காட்டுவோம். அதன் மூலம் ஒட்டுமொத்த உலகமும் அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்டவற்றால் நிறையட்டும். அனைவருக்கும் எனது கிறித்துமஸ் நல்வாழ்த்துகள்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story