

சென்னை,
அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, அன்புமணி ராமதாசுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் தங்களது மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் பிறந்த நாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேலும் பல ஆண்டுகள் சிறந்த ஆரோக்கியத்துடன் மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மதிப்பிற்குரிய அன்புமணி ராமதாசுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புமணி ராமதாஸ் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர்ந்து ஆற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.