தென்பெண்ணை ஆற்றில் ராஜராஜ சோழன் காலத்து செப்பு நாணயம் கண்டெடுப்பு

மூதாதையர்கள் பயன்படுத்திய அரிய நீலநிற மணி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் ராஜராஜ சோழன் காலத்து செப்பு நாணயம் கண்டெடுப்பு
உதவி இயக்குநர் லோகநாதன்
Published on

திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்றுப் படுகையில், மாமன்னன் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்து செப்பு நாணயம் மற்றும் பழங்கால அரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கற்கால ஆயுதம்

திருக்கோவிலூர் தென்பெண்ணை குழுவினர் அளித்த வரலாற்று தகவலின் அடிப்படையில், தொல்லியல் துறையினர் அந்த பகுதியில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது 18 சென்டிமீட்டர் நீளமும், 4.5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட ஈட்டி போன்ற அரிய கல் ஆயுதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இது புதிய கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் பயன்படுத்திய வேட்டை ஆயுதம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பகுதியில் மூதாதையர்கள் பயன்படுத்திய அரிய நீலநிற மணி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சங்க காலத்தை சேர்ந்தது

ஆராய்ச்சியாளர்கள் தீவிரம்

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் தென்கரை மற்றும் வடகரை பகுதிகள் வரலாற்று சிறப்புமிக்க இடங்களாக கருதப்படுகின்றன. மேலும், இப்பகுதியின் வரலாற்று பெருமையை முழுமையாக வெளிக்கொணர விரிவான தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உதவி இயக்குநர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com