அந்தமான் நிக்கோபர் புயல் எச்சரிக்கை - சுற்றுலா தளங்கள் மூடல்...!

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் புயல் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் அங்கு சுற்றுலா தளங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்தமான் நிக்கோபர் புயல் எச்சரிக்கை - சுற்றுலா தளங்கள் மூடல்...!
Published on

சென்னை,

அந்தமான், நிக்கோபார் தீவுகளின் அருகே வங்கக் கடலில் தென் கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. அது புயலாக உருவாகி அந்தமான் நிக்கோபா பகுதிகளை தாக்கும் ஆபத்து உள்ளது.

இதையடுத்து அந்தமான் நிக்கோபா பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் இன்று 19ம் தேதியில் இருந்து வரும் 22ந் தேதி செவ்வாய்கிழமை வரை மூடப்பட்டுள்ளன. எனவே அந்தமான், நிக்கோபா பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் இருந்து அந்தமான், நிக்கோபா தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை சமீப நாட்களில் அதிகரித்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு விமானங்களில் 1,500 க்கும் மேற்பட்ட பயணம் செய்து வந்தனர். இதில் அதிகமானவர்கள் சுற்றுலா பயணிகளாக செல்பவாகள்.

இதையடுத்து சென்னையில் இருந்து அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அங்கு அவதிப்பட கூடாது என்பதற்காக புயல் எச்சரிக்கையாக அந்தமானில் சுற்றுலா தளங்கள் 22ந் தேதி வரை மூடப்பட்டு இருப்பது பற்றி அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதோடு சுற்றுலாவுக்காக அந்தமான் செல்லும் பயணிகள் தங்களுடைய பயணங்களை வரும் 22ந் தேதி வரை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com