அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.
அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
Published on

அந்தியூர்

அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. இந்த சந்தைக்கு காட்டுப்பாளையம், சந்தியபாளையம், பிரம்மதேசம், வேம்பத்தி, வெள்ளாளபாளையம், அத்தாணி, எண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 100 வெற்றிலைகளை கொண்டது ஒரு வெற்றிலை கட்டு ஆகும். ராசி வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.180-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.220-க்கும், பீடா வெற்றிலை குறைந்தபட்ச விலையாக ரூ.90-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.100-க்கும், செங்காம்பு வெற்றிலை கட்டு ஒன்று ரூ.20-க்கும் விற்பனை ஆனது. ஈரோடு, திருப்பூர், கோவை, சத்தியமங்கலம், பெருந்துறை, தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வெற்றிலைகளை வாங்கி சென்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com