ஆந்திர அமைச்சர் ரோஜாவின் கணவர் கார் கண்ணாடி உடைப்பு - சென்னையில் பதற்றம்

சென்னையில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.
ஆந்திர அமைச்சர் ரோஜாவின் கணவர் கார் கண்ணாடி உடைப்பு - சென்னையில் பதற்றம்
Published on

சென்னை,

பிரபல திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி, மக்களாட்சி, ராஜமுத்திரை, அரசியல், ராஜஸ்தான், குற்றப்பத்திரிகை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஆர். கே.செல்வமணி. நடிகை மற்றும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜாவின் கணவர்.

பெப்சி திரைப்பட இயக்கத்தின் தலைவராக இருந்தவர். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவராக உள்ளார். இவரின் வீடு விருகம்பாக்கத்தில் உள்ளது.

இந்த நிலையில், ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com