குளிர்பானத்தில் மயக்க மருந்து: இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சினிமா தயாரிப்பாளர்

இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
குளிர்பானத்தில் மயக்க மருந்து: இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சினிமா தயாரிப்பாளர்
Published on

அம்பத்தூர்,

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி (வயது 30). சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்தில் கொரட்டூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலைக்கு சேர்ந்தார்.

இந்தநிலையில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், "முகமது அலி தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார். எனக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

இதில் கர்ப்பமான எனக்கு, சத்து மாத்திரைகள் எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்தார். கருக்கலைப்பு குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும், என்னை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கேட்டும் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் அந்த பெண் கூறி இருந்தார்.

அதன்பேரில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com