அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மண்டலாபிஷேகம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மண்டலாபிஷேகம் நடந்தது.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மண்டலாபிஷேகம்
Published on

நொய்யல்,

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததையொட்டி 48-வது நாள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்தனர். பின்னர் சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com