ரூ.13 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்

விண்ணமங்கலம் ஊராட்சியில் ரூ.13 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
ரூ.13 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்
Published on

ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு நிதியின் கீழ் ரூ.13 லட்சத்து 66 ஆயிரம் மதீப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பணிகளுக்கு மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் ப.ச.சுரேஷ்குமார் அடிக்கல் நாட்டினார். மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.13 லட்சம் மதீப்பீட்டில் நடைபெறும் புதிய சிமெண்டு சாலை பணியினை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கார்த்திக் ஜவகர், ஜோதிவேலு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com