ரூ.75 லட்சத்தில் அங்கன்வாடி, ரேஷன் கடைகள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

நங்கநல்லூர், ஆதம்பாக்கம் பகுதியில் ரூ.75 லட்சத்தில் அங்கன்வாடி, ரேஷன் கடைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
ரூ.75 லட்சத்தில் அங்கன்வாடி, ரேஷன் கடைகள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்
Published on

ஆதம்பாக்கம்,

சென்னையை அடுத்த நங்கநல்லூர் 100 அடி சாலை, ஆதம்பாக்கம் பகுதிகளில் 3 ரேஷன் கடைகள், ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோவில் தெருவில் அங்கன்வாடி மையம் என தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் துர்கா தேவி நடராஜன், பூங்கொடி ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தனர்.

புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார். இதில் மாநகராட்சி அதிகாரிகள் சரவண பெருமாள், முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com