அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை உள்பட 3 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து 10 மாத குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை உள்பட 3 பேர் காயம்
Published on

அங்கன்வாடி கட்டிடம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி கட்டிடம் கட்டி 35 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இங்கு 20 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அங்கன்வாடிக்கு 12 குழந்தைகள் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கன்வாடி கட்டிடத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாமும் நடைபெற்றது. முகாமில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தனர்.

3 பேர் காயம்

அப்போது கட்டிட மேற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் அங்கன்வாடியின் உள்ளே தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்த மணிவிளான் தெருவை சேர்ந்த ரமலான் பேகம் (வயது 21), அவரது 10 மாத குழந்தை ஐமான், கோட்டை 3-ம் வீதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் அனாலிகா (3) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். மேலும் அங்கிருந்தவர்கள் காயமின்றி தப்பினர்.

இதையடுத்து அங்கிருந்புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து 10 மாத குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர்.தவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கன்வாடி கட்டிடத்திற்கு சீல்

இதுகுறித்து தகவல் அறிந்த காயமடைந்தவர்களின் உறவினர்கள் அங்கன்வாடியில் திரண்டனர். மலும் கட்டிடத்தை பராமரிப்பு செய்த ஒப்பந்ததரார்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் அங்கன்வாடி கட்டிடத்தை பூட்டி சீல் வைத்தனர். அங்கன்வாடி கட்டிடத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து 3 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து 17-வது வார்டு கவுன்சிலர் கலையரசி கூறுகையில், அங்கன்வாடி கட்டிடத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. நான் பலமுறை நகராட்சி கூட்டத்தில் என்னுடைய வார்டில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளது. எனவே அந்த கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com