அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தஹஜிம்பானு தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மின் மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவிதமான நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

அங்கன்வாடி மையங்களின் மின் கட்டணத்தை அரசே கட்ட வேண்டும். பணியில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு லோன் வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com