அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் பில் முழுத்தொகையையும் அரசே வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் பிரேமா தலைமை தாங்கினார். செயலாளர் ஞானம்மாள், நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் முருகன், மாநில துணைத்தலைவர் செண்பகம், மாவட்ட தலைவர் பீர் முகமது ஷா, பொருளாளர் ராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் ஜூலிற்றா, நிர்வாகிகள் சிவசக்தி, மலபகவதி, மீனா பாய், பூங்கோதை, ராஜேஸ்வரி, கோமதி, ஓமனா, மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com