மாயூரநாதர் சுவாமி கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா

மாயூரநாதர் சுவாமி கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மாயூரநாதர் சுவாமி கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையம்-மதுரை சாலையில் மாயூரநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் கொடி

மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு மாயூரநாதர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவையொட்டி வருகிற 30-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 2-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com