நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்

தியாகதுருகத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்
நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்
Published on

தியாகதுருகம்

தியாகதுருகத்தில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நடராஜர் உடனுறை சிவகாமசுந்தரி அம்மனுக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை சாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி, தேரோடும் வீதியில் சாமி வீதிவுலா நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com