கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவிலிருந்த விலங்குகள் சென்னை வண்டலூருக்கு இடமாற்றம்

கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் அங்குள்ள விலங்குகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவிலிருந்த விலங்குகள் சென்னை வண்டலூருக்கு இடமாற்றம்
Published on

வண்டலூர், 

கோவை வ.உ.சி பூங்காவானது இந்தியாவிலேயே மாநகராட்சி கட்டுப்பாட்டிலிருந்த ஒரே உயிரியல் பூங்கா என்ற பெருமையைக் கொண்டது. 1965-ம் ஆண்டு முதல் இந்த பூங்காவானது செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பூங்காவில் பழைய கட்டமைப்பு வசதிகள் மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் கீழ் செயல்படும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையமானது கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தைக் கடந்த 2022-ல் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் மாநகராட்சி வசம் இருந்த வ.உ.சி பூங்கா வனத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது.

இந்நிலையில் பூங்காவில் இருந்த விலங்குகள், பறவைகள் வண்டலூர் பூங்கா, சத்தியமங்கலம், வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன்படி பறவைகள், பாம்புகள், மரநாய் உள்ளிட்டவை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com