அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி: முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பு

அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் கலந்துகொண்டார்.
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி: முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பு
Published on: 

சென்னை,

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மகள் காவியா மாறனுக்கும், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் கடந்த 11-ம் தேதி கிரீஸில் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துக்கொள்வதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வருகை தந்துள்ளனர்.

முதல்-அமைச்சர் விஜய்

இந்த நிலையில், அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய், நிகழ்ச்சி நடைபெறும் ஹோட்டலுக்கு வருகை தந்தார். இதன் பின்னர் அனிருத் - காவியா மாறன் தம்பதிக்கு மலர்க்கொத்து வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

நிகழ்ச்சியின்போது முன்னாள் முதல்-அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து நடிகர் ரஜினிகாந்துடன் பேசிக்கொண்ட புகைப்படங்கள் தற்போது கவனம் பெற்று வருகிறது.

X