

செங்கோட்டை:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செங்கோட்டை போலீஸ் நிலையம் அருகில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளா செல்லத்துரை தலைமை தாங்கி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் 'கேக்' வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளா எஸ்.எம்.ரஹீம், மாவட்ட பொருளாளா சேக்தாவூது, தென்காசி ஒன்றிய தலைவா சேக் அப்துல்லா, ஒன்றிய செயலாளா திவான் ஒலி உள்பட பலா கலந்து கொண்டனா.