பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி

திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி வருகிற 14-ந் தேதி நடக்கிறது.
பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி
Published on

திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி அளவில் நடக்கிறது.

போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களின் பிறப்பு சான்று மற்றும் ஆதார் அட்டை நகலினை எடுத்து வர வேண்டும். மேலும் இந்தியாவில் தயார் செய்யப்பட்ட சாதாரண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் இருந்தும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு ஈசான்ய மைதானத்தில் இருந்தும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஈசான்ய மைதானத்தில் இருந்தும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி இருந்தும் தொடங்கி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நிறைவடைகிறது.

போட்டியில் கலந்து கெண்டு வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் தகுதிச் சான்றிதழும், 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.250 மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியில் பங்கு பெற உள்ள மாணவ, மாணவிகள் வருகிற 14-ந் தேதி போட்டி தொடங்கும் வரை தங்களது சுய விவரம் மற்றும் பிற விவரங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் அளித்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com