அண்ணா சிலைக்கு தீ வைப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

அண்ணா சிலைக்கு தீ வைப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா சிலைக்கு தீ வைப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்
Published on

சென்னை,

இது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு என்று இந்த மாநிலத்துக்கு பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர் பேரறிஞர் அண்ணாவின் சிலையை கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் கொடூர எண்ணம் கொண்டோர் தீ வைத்துக் கொளுத்தியுள்ளது கடுமையான கண்டனத்துக்குரியது. அமைதி தவழும் தமிழகத்தை வன்முறைக்காடாக்க நினைக்கும் சக்திகளைத் தமிழக மக்கள் அடையாளம் கண்டு ஜனநாயக ஆயுதத்தால் நிச்சயம் தண்டிப்பார்கள்.

அண்ணாவின் பெயரை லேபிளாக'க் கொண்ட அடிமைக் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் சிலைகள் மட்டுமின்றி, அ.தி.மு.க.வின் நிறுவனரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகளும் சிதைக்கப்படுகின்றன. இத்தகைய வன்முறைப் போக்கை ஒடுக்க வக்கின்றி, எதிர்க்கட்சிகளை வக்கணை பேசிக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் உள்ளிட்டவர்களின் போக்கு வெட்கக்கேடானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com